விருதுநகர் ராமமூர்த்தி ரோட்டை சேர்ந்தவர் திலீப்குமார் (வயது 74). குஜராத்தை சேர்ந்த இவர் பல ஆண்டுகளுக்கு முன்பே விருதுநகர் வந்து இங்கு பஞ்சு வியாபாரம் செய்து வந்தார். வீட்டில் நாற்காலியில் இருந்து எழுந்தபோது சுவரில் தலைமுட்டி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக அவரை சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அவரது சகோதரர் மோதிலால் கொடுத்த புகாரின் பேரில் இந்நகர் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.