விஷம் குடித்து வியாபாரி தற்கொலை

தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் விஷம் குடித்து வியாபாரி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-09-27 18:45 GMT

கொல்லங்கோடு:

தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் விஷம் குடித்து வியாபாரி தற்கொலை செய்து கொண்டார்.

வியாபாரி

நித்திரவிளை அருகே வாவறை பகுதியை சேர்ந்தவர் சுடலை முத்து (வயது 47). வியாபாரியான இவர் நடைக்காவு பகுதியில் பழைய இரும்பு கடை நடத்தி வந்தார். இவருடைய மனைவி லைலா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

மது பழக்கம் உடைய இவர் சரியாக தொழிலை கவனிக்காமல் இருந்ததால் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் மனவேதனையில் இருந்த அவர் நேற்றுமுன்தினம் மதுவில் விஷம் கலந்து குடித்தார்.

தற்கொலை

அப்போது வீட்டுக்கு வந்த மனைவி லைலா, இந்த காட்சியை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் உறவினர்கள் உதவியுடன் கணவரை மீட்டு சிகிச்சைக்காக மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சுடலைமுத்து பரிதாபமாக இறந்தார்.

மேலும் இதுபற்றி தகவல் அறிந்த நித்திரவிளை போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் வியாபாரி தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்