விஷம் குடித்து வியாபாரி தற்கொலை

சாணார்பட்டி அருகே, கடன் தொல்லையால் விஷம் குடித்து வியாபாரி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-08-03 16:44 GMT

சாணார்பட்டி அருகே உள்ள பண்ணைப்பட்டியை சேர்ந்தவர் கார்த்திக்சாமி (வயது 31). இவர், அதே ஊரில் கோழிக்கடை நடத்தி வந்தார். இவர், கடன் தொல்லையால் மனமுடைந்து காணப்பட்டார். இந்நிலையில் கடந்த மாதம் 29-ந் தேதி இவர், வீட்டில் யாரும் இல்லாதபோது விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று கார்த்திக்சாமி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சாணார்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்