முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கியது
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்பிக்கள் கூட்டம் தற்போது தொடங்கியது.
ஜூலை 20ம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் எழுப்பப்பட வேண்டிய முக்கிய பிரச்னைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. ஆளுநர் ஆா்.என்.ரவியின் செயல்பாடுகள், பொது சிவில் சட்டம், மணிப்பூர் கலவரம், அமலாக்கத்துறை சோதனை, விலைவாசி உயர்வு உள்ளிட்ட முக்கிய விஷயங்களை எழுப்புவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.