மெக்கானிக் உடல் நசுங்கி பலி

சின்னசேலம் அருகே விபத்து மெக்கானிக் உடல் நசுங்கி பலி

Update: 2023-07-09 18:45 GMT

கள்ளக்குறிச்சி

சேலம் மாவட்டம் கெங்கவல்லி தாலுகா பள்ளக்காடு கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் மகன் கனகராஜ்(வயது 45). இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கூகையூரில் டிராக்டர் என்ஜின் பழுது பாா்க்கும் ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் கனகராஜ் நேற்று முன்தினம் மாலை டிராக்டர் என்ஜின் முன்பு நின்று பழுது பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது பழுது பார்ப்பதற்காக வந்து கொண்டிருந்த மற்றொரு டிராக்டர் பழுது பார்த்துக்கொண்டிருந்த டிராக்டரின் பின்னால் மோதியது. இதில் ஒர்க்ஷாப்பின் சுவருக்கும், பழுது பார்த்துக்கொண்டிருந்த டிராக்டருக்கும் இடையே சிக்கிய கனகராஜ் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து கனகராஜின் மனைவி சித்ரா கொடுத்த புகாரின் பேரில் கீழ்க்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்