துப்புரவு பணியாளர்களை கவுன்சிலர் இருக்கையில் அமரவைத்து குறைகளை கேட்ட பேரூராட்சித்தலைவர்

செஞ்சி பேரூராட்சி தலைவர் மொக்தியார் மஸ்தான், துப்புரவு பணியாளர்களை வார்டு கவுன்சிலர்கள் இருக்கையில் அமர வைத்து, அவர்களின் குறைகளை கேட்ட செயல் பெரிதும் வரவேற்கப்பட்டு வருகிறது.

Update: 2022-06-05 07:39 GMT

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பேரூராட்சி தலைவர் மொக்தியார் மஸ்தான், துப்புரவு பணியாளர்களை வார்டு கவுன்சிலர்கள் அமரும் இருக்கையில் அமர வைத்து, அவர்களின் குறைகளை கேட்டார்.

சில தினங்களுக்கு முன் இவரது தந்தையான அமைச்சர் செஞ்சி மஸ்தான் மலைவாழ் மக்களுக்கு 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொந்த நிலத்தை அளித்தார். இந்நிலையில் மொக்தியார் மஸ்தானின் இந்த செயல் பெரிதும் வரவேற்கப்பட்டு வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்