மேயர் தேசிய கொடி ஏற்றினார்

கோவை மாநகராட்சியில் நடந்த குடியரசு தினவிழாவில் தேசிய கொடியை மேயர் கல்பனா ஏற்றினார். சிறப்பாக பணியாற்றிய கவுன்சிலர்களுக்கு விருது வழங்கப்பட்டது.

Update: 2023-01-26 18:45 GMT

கோவை மாநகராட்சியில் நடந்த குடியரசு தினவிழாவில் தேசிய கொடியை மேயர் கல்பனா ஏற்றினார். சிறப்பாக பணியாற்றிய கவுன்சிலர்களுக்கு விருது வழங்கப்பட்டது.

குடியரசு தினவிழா

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. முன்னதாக கோவை மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் உள்ள காந்தி உருவச்சிலைக்கு மேயர் கல்பனா, ஆணையாளர் பிரதாப் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

அதைத்தொடர்ந்து விக்டோரியா ஹால் வளாகத்தில் மேயர் கல்பனா தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது ஆணையாளர் பிரதாப், துணை மேயர் வெற்றிச்செல்வன், துணை ஆணையாளர் ஷர்மிளா ஆகியோர் அருகில் நின்றனர்.

கவுன்சிலர்களுக்கு விருது

இதையடுத்து சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி கவுன்சிலர்கள் ஜி.வி.நவீன்குமார், ஆ.ராதாகிருஷ்ணன், செ.சரண்யா, எம்.கே.பிரவீன்ராஜ், பிரபா ரவீந்திரன், ஏ.அன்னக்கொடி, இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், கே.கார்த்திக் செல்வராஜ், இ.அகமது கபீர், ரா.கார்த்திகேயன். ஆகிய 10 பேருக்கு விருது, மாநகராட்சியில் 25 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றிய 38 பேருக்கு தலா ரூ.2 ஆயிரம் மற்றும் நற்சான்றிதழ்களை மேயா் மற்றும் ஆணையாளர் ஆகியோர் வழங்கினார்கள்.

தொடர்ந்து சிறந்த முறையில் பணியாற்றிய மாநகராட்சி அதிகாரிகள், குப்பைகளை தரம் பிரித்து வாங்கிய தூய்மை பணியாளர்கள், குப்பைகளை தரம் பிரிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தியவர்கள், ஆதரவற்றோர் விடுதியில் உள்ளவர்களுக்கு சிறப்பாக சேவை ஆற்றியவர்கள், என மொத்தம் 76 பேருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

கலைநிகழ்ச்சிகள்

பின்னர் மாநகராட்சி பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவில் மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் மற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்