மாஸ்டர் பிளான் சட்டத்தை மாற்றியமைக்க வேண்டும்

மாஸ்டர் பிளான் சட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று கலெக்டரிடம் பொறியாளர்கள் மனு அளித்தனர்.

Update: 2023-06-19 22:45 GMT

ஊட்டி

நீலகிரி மாவட்ட சிவில் பொறியாளர்கள் சங்க தலைவர் திலக்குமார் தலைமையில் பொறியாளர்கள் நேற்று ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் அம்ரித்தை சந்தித்து மனு கொடுத்தனர். அதில் கூறப்பட்டு உள்ளதாவது:- நீலகிரி மாவட்டத்தில் உள்ள மாஸ்டர் பிளான் சட்டம் 2011-ம் ஆண்டு மாற்றி அமைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 2016 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் இந்த சட்டத்தை மாற்றி அமைத்திருக்க வேண்டும். ஆனால் மாற்றப்படவில்லை. எனவே, நீலகிரி மாவட்டத்தில் அதிகரித்து வரும் மக்கள் தொகை காரணமாக, இந்த சட்டத்தை உடனடியாக மாற்றி அமைக்க வேண்டும். கட்டிட அனுமதிக்கான காலம் ஓராண்டில் இருந்து 5 ஆண்டாக உயர்த்த வேண்டும். மேலும் தற்போது கட்டிடத்துக்கான அனுமதி பெறுவதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதனால் உள்ளூர் மக்கள் வீடுகள் கட்ட முடியாமல் அவதியடைந்து வருகின்றனர். எனவே, கட்டிட அனுமதியை உரிய நேரத்தில் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்