மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் முயற்சி

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

Update: 2022-07-28 16:38 GMT

வேளாங்கண்ணி:

கீழையூர் ஒன்றியம் வாழக்கரையில் ஜீவா நகர் குளத்தில் படித்துறை அமைத்து தர வேண்டும். வாழக்கரை 5-வது வார்டு தெற்கு தெரு சாலையை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வாழக்கரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கிளை செயலாளர் அன்பழகன் தலைமையில், கட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் முருகையன், கீழையூர் மேற்கு ஒன்றிய செயலாளர் வெங்கட்ராமன் உள்பட பலர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருக்குவளை தாசில்தார் ராஜ்குமார், கீழையூர் வட்டார வளர்ச்சி அலுவலர் வெற்றிச்செல்வன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்களின் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சியினர் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்