மருதுபாண்டியர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

வாலாந்தரவையில் மாமன்னர் மருதுபாண்டியர்களின் 221-வது குருபூஜை விழாவை முன்னிட்டு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Update: 2022-10-27 18:47 GMT

பனைக்குளம்,

வாலாந்தரவையில் மாமன்னர் மருதுபாண்டியர்களின் 221-வது குருபூஜை விழாவை முன்னிட்டு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மருதுபாண்டியர்கள் சிலைக்கு மரியாதை

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் யூனியன் வாலாந்தரவை கிராமத்தில் மருதுபாண்டியர்களின் 221-வது ஆண்டு குருபூஜை விழாவையொட்டி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. முன்னதாக கிராமத்தின் சார்பில் கிராம தலைவர் தர்மராஜ் தலைமையில் செயலாளர் காந்தி, பொருளாளர் பி.டி.சரவணன், துணை தலைவர் நாகராஜ், துணை செயலாளர் சுரேஷ், தண்டல் முனியசாமி, முன்னாள் கிராம தலைவர் விசுவநாதன், செல்வம், ராஜேந்திரன், சேகர், குமார், ரஜினி, முத்து, முனியசாமி, பழனி, ஊராட்சி தலைவர் முத்தமிழ்ச்செல்வி பூர்ணவேல், ஒன்றிய கவுன்சிலர் நித்தியா ரகுபதி, துணை தலைவர் ஜீவரத்தினம் சங்கர் மற்றும் இளைஞர்கள் முன்னிலையில் பெண்கள் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.

தி.மு.க-அ.தி.மு.க

தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. தலைமையில் மருதுபாண்டியர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் நகர் செயலாளர்கள் ராமநாதபுரம் கார்மேகம், ராமேசுவரம் நாசர்கான், அண்ணாமலை கார்பரேசன் நிறுவனரும் மாவட்ட பிரதிநிதியுமான டி.கே.குமார், மண்டபம் மத்திய ஒன்றிய செயலாளர் முத்துக்குமார், மண்டபம் கிழக்கு ஒன்றிய செயலாளர் நிலோபர்கான், மேற்கு ஒன்றிய செயலாளர் கே.ஜே.பிரவீன், முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் பி.டி.ராஜா, வழுதூர் சாமிநாதன், சுதாகர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அ.தி.மு.க சார்பில் மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி தலைமையில் மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.ஜி.மருதுபாண்டியன், மாவட்ட இளைஞரணி செயலாளர் ஸ்டாலின் ஜெயச்சந்திரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னதாக விழாவுக்கு வந்திருந்த மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமியை வாலாந்தரவை கிராமத்தை சேர்ந்த மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற இணைச் செயலாளர் ஜெயபால் சால்வை அணிவித்து வரவேற்றார். நிகழ்ச்சியில் மாநில எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் ஆர்.ஜி.ரத்தினம், மாவட்ட அவை தலைவர் சாமிநாதன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் சேதுபாலசிங்கம், ராமநாதபுரம் நகர் செயலாளர் பால்பாண்டியன், மாவட்ட மகளிரணி செயலாளர் ஜெய்லானி சீனிக்கட்டி, மாவட்ட தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சரவணக்குமார், மண்டபம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜானகிராமன், ராமநாதபுரம் அ.தி.மு.க. முன்னாள் நிர்வாகி செல்வம், ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் நாட்டுக்கோட்டை கார்த்திகேயன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன், ஜெ.சுமன், வழுதூர் வி.ஜி.பி. கோபால், மொட்டையன்வலசை கோபால், தெற்குக்காட்டூர் சிவசாமி, வழுதூர் ஜெகன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

பா.ஜ.க.

பின்னர் பா.ஜ.க. சார்பில் மாவட்ட தலைவர் கதிரவன் தலைமையில் பா.ஜ.க. பிரமுகரும், உயர்நீதிமன்ற வக்கீலுமான சண்முகநாதன், அமெரிக்க தொழில் அதிபர் அன்பழகன், மண்டபம் ஒன்றிய தலைவர் விக்ராந்த் சந்துரு, ஒன்றிய செயலாளர் இளசு என்ற இளையராஜா, மாவட்ட துணைத்தலைவர் அழகர் உள்பட கட்சி நிர்வாகிகள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அகமுடையார் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் பாம்பன் ராஜாஜி தலைமையில் நிர்வாகிகளும், நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள், அ.ம.மு.க. கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பட்டணம்காத்தான் ஊராட்சி பாரதிநகரில் மாமன்னர் மருதுபாண்டியரின் 221-வது குருபூஜை விழா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை அனைத்து அகமுடையார் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் வி.கே.சுரேஷ், செயலாளர் கே.வி.ரமேஷ், நகர் தலைவர் விஜயராமகிருஷ்ணன், அகமுடையார் சங்க நிர்வாகி சிவா, செயலாளர் ஜோதிராஜ், தொழில்நுட்ப பிரிவு மாவட்ட தலைவர் பாலாஜி, காளிதாஸ், அஜித் உள்பட பலர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்