பணம் பறிக்க முயன்றவர் கைது

பணம் பறிக்க முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-04-09 19:03 GMT

சிவகாசி,

சிவகாசி சாட்சியாபுரம் என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்தவர் முருகன் (வயது 43). இவர் திருத்தங்கல்-எஸ்.என்.புரம் ரோட்டில் உள்ள ஒரு தனியார் மதுபாரில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இந்தநிலையில் சம்பவத்தன்று பாருக்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டு அதே பகுதியில் உள்ள கல்குவாரி அருகில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஆலாவூரணியை சேர்ந்த மாரிச்செல்வம் (25) என்பவர் கத்தியை காட்டி மிரட்டி முருகனிடம் பணம் பறிக்க முயன்றுள்ளார். இதுகுறித்து முருகன் திருத்தங்கல் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரிச்செல்வத்தை கைது செய்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்