வாலிபரை அரிவாளால் வெட்ட முயன்றவர் கைது

மானூர் அருகே வாலிபரை அரிவாளால் வெட்ட முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-06-14 22:09 GMT

மானூர்:

மானூர் அருகே உள்ள தெற்குப்பட்டியை சேர்ந்தவர் இசக்கி பாண்டி (வயது 32). இவரது தந்தை பேச்சிமுத்து இடப்பிரச்சினை காரணமாக கடந்த 2019-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அதே ஊரைச் சேர்ந்த சுடலையாண்டி (38) மற்றும் அவரது கூட்டாளிகள் மீது கொலை வழக்கு உள்ளது. இந்த வழக்கில் இசக்கி பாண்டி, அவரது தாய் அவ்வையார், சகோதரிகள் லதா, சாந்தி, ரேவதி மற்றும் இசக்கி பாண்டியின் மனைவி பேச்சியம்மாள் ஆகியோர் சாட்சியாக உள்ளனர்.

இந்த நிலையில் இசக்கி பாண்டி திருச்செந்தூரில் ஒரு திருமணத்திற்கு செல்ல வேனுடன் தனது உறவினர்கள் வருகைக்காக காத்திருந்தார். அப்போது அங்கே மோட்டார் சைக்கிளில் வந்த சுடலையாண்டி, எனக்கு எதிராக சாட்சி சொன்னால் உன்னை வெட்டி கொலை செய்து விடுவேன் என கூறிக்கொண்டே கையில் இருந்த அரிவாளால் இசக்கி பாண்டியை வெட்ட முயன்றதாக கூறப்படுகிறது. இதில் இசக்கி பாண்டி விலகியதால் உயிர் தப்பினார். இதுகுறித்து இசக்கிபாண்டி கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சபாபதி, சுடலையாண்டி மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்