வாலிபரை பேனா கத்தியால் கிழித்தவர் கைது

முன்விரோதம் காரணமாக வாலிபரை பேனா கத்தியால் கிழித்தவர் கைது

Update: 2023-03-12 18:45 GMT

விழுப்புரம்

விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயராமன் மகன் விஷ்ணுவர்தன்(வயது 24). இவர் விழுப்புரம் கே.கே.சாலையில் அடுப்புக்கரி கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு முன்பாக உள்ள காலியிடத்தில் சாலாமேட்டை சேர்ந்த ஜெஸ்வந்த்சிங்(48) என்பவர் கடந்த 3 ஆண்டுகளாக டிபன் கடை வைத்து நடத்தி வந்தார். இந்த கடைக்கு தான், வரி செலுத்துவதாகவும், இதனால் விஷ்ணுவர்தனிடம் உங்களுக்கு வாடகை கொடுக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து விஷ்ணுவர்தன், இதுபற்றி விழுப்புரம் கோட்டாட்சியரிடம் முறையிட்டார். இதுகுறித்து விசாரணை நடத்திய கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், விஷ்ணுவர்தனுக்குத்தான் கடை சொந்தம் என்று கூறியுள்ளார். இதனால் ஜெஸ்வந்த்சிங் அங்கிருந்து டிபன் கடையை காலி செய்துவிட்டு சென்று விட்டார். இந்த முன்விரோதத்தை மனதில் வைத்துக்கொண்ட ஜெஸ்வந்த்சிங், விஷ்ணுவர்தன் கடைக்குச்சென்று அவரை திட்டி பேனா கத்தியால் முன்கழுத்தில் கிழித்து கொலை மிரட்டல் விடுத்தார். இதில் காயமடைந்த விஷ்ணுவர்தன், விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெஸ்வந்த் சிங்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்