துப்பாக்கி காட்டி மிரட்டியவர் கைது
நாட்டறம்பள்ளி அருகே துப்பாக்கி காட்டி மிரட்டியவரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த கொத்துபாட்டை மாரியம்மன் கோயில் வட்டம் பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை (வயது 38). கொத்தூர் அருகே உள்ள வீராசாமி வட்டத்தை சேர்ந்தவர் முருகன் (56). இருவரும் உறவினர்கள்.
இருவருக்கும் முன்விரதம் இருந்து வந்த நிலையில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது முருகன் கை துப்பாக்கியை காட்டி அண்ணாதுரையை மிரட்டி உள்ளார். பின்னர் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் படுகாயம் அடைந்த அண்ணாதுரை சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாா்.
இதுகுறித்து இருவரும் தனித்தனியாக நாட்டறம்பள்ளி போலீசில் புகார் செய்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து கை துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.
மேலும் முருகன் கொடுத்த புகாரின் பேரில் அண்ணாதுரை மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.