பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
பரப்பாடி அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.
இட்டமொழி:
பரப்பாடி அருகே உள்ள அண்ணாநகர் மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் தங்கமணி மனைவி சண்முகக்கனி (வயது 42). இலங்குளம் தேவர் தெருவைச் சேர்ந்தவர் மீனாட்சி சுந்தரபாண்டியன் மகன் ஆறுமுக பாண்டியன் (39). சண்முகக்கனி இலங்குளத்தில் உள்ள அரசு புறம்போக்கு இடத்தில் வீடு கட்டியுள்ளதாகவும், அந்த இடம் ஆறுமுக பாண்டியன் உறவினர் மகாராஜனுக்கு சொந்தமான இடம் என்று கூறி சண்முகக்கனியிடம் ஆறுமுகபாண்டியன் தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் இதுதொடர்பாக ஆறுமுகபாண்டியன், சண்முகக்கனியை அவதூறாக பேசி அரிவாளை காட்டி கொலைமிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் வடக்கு விஜயநாராயணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாககுமாரி, சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ஆறுமுகபாண்டியனை கைது செய்தனர்.