பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-08-28 16:17 GMT

ஸ்பிக்நகர்:

தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் அய்யன்கோவில் தெருவை சேர்ந்தவர் கருணாகரன் மனைவி காளீஸ்வரி (வயது 38). இவர் வீட்டில் இருந்த போது, அங்கு வந்த தெர்மல்நகரைச் சேர்ந்த முருகன் மகன் பிரகாஷ் (25) என்பவர் அவதூறாக பேசி, தாக்கியதாகவும், அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின் பேரின் முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பிரகாஷை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்