பெண்ணை மிரட்டியவர் கைது

முக்கூடல் அருகே பெண்ணை மிரட்டியவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-06-23 20:00 GMT

முக்கூடல்:

பாப்பாக்குடி புதுக்கிராமம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவபெருமாள் (வயது 21). இவர் முக்கூடல் அருகே சிங்கம்பாறை பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணிடம் பேசி வந்துள்ளார். இதனை அறிந்ததும் மகளை, தாயார் கண்டித்ததால் அந்த பெண், சிவபெருமாளிடம் பேசாமல் இருந்துள்ளார். இந்தநிலையில் அந்த பெண்ணின் தாயார் தனது வீட்டின் முன்பு நின்றபோது அங்கு வந்த சிவபெருமாள், அவரை அவதூறாக பேசி மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் முக்கூடல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆக்னல் விஜய் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சிவபெருமாளை நேற்று கைது செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்