தர்மபுரி வெண்ணாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஜெயலட்சுமி (வயது 33). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த தினேஷ் (31) என்பவருக்கும் ஏலச்சீட்டு பணம் தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டது. ஜெயலட்சுமி வீட்டின் அருகே வந்த தினேஷ் பணத்தை கொடுக்குமாறு தரக்குறைவாக பேசி ஜெயலட்சுமியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஜெயலட்சுமி தர்மபுரி டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தினேஷை கைது செய்து விசாரணை நடத்தினர்.