பெண்ணை மிரட்டி செல்போன் பறித்தவர் கைது

விழுப்புரம் அருகே பெண்ணை மிரட்டி செல்போன் பறித்தவர் கைது

Update: 2022-11-08 18:45 GMT

விழுப்புரம்

விழுப்புரம் அருகே உள்ள கொட்டப்பாக்கத்துவேலி கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் மனைவி சத்யா (வயது 32). சம்பவத்தன்று இவரிடம் பிடாகத்தை சேர்ந்த லட்சுமணன்(39) என்பவர் ரூ.10 ஆயிரம் தரும்படி கேட்டு மிரட்டியுள்ளார். அதற்கு பணம் தர மறுத்த சத்யாவின் கையில் இருந்த ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை லட்சுமணன் பறித்துச்சென்று விட்டார். இதுகுறித்து சத்யா, விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லட்சுமணனை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்