ஓட்டல் உரிமையாளரை மிரட்டியவர் கைது

நெல்லை மேலப்பாளையத்தில் ஓட்டல் உரிமையாளரை மிரட்டியவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-08-23 19:59 GMT

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தை சேர்ந்த சாகுல் ஹமீது, தற்போது நெல்லை அருகே மேலப்பாளையம் நேதாஜி நகரில் வசித்து வருகிறார். இவர் அங்கு ஓட்டல் நடத்தி வருகிறார். இவரின் ஓட்டலில் நெல்லை சந்திப்பை சேர்ந்த அப்துல் ரகுமான் (வயது 35) என்பவர் கணக்காளராக பணியாற்றி வந்தார். அப்போது அவர் பணம் முறைகேடு செய்ததாக வேலையில் இருந்து நீக்கப்பட்டாராம்.

இதனால் ஆத்திரம் அடைந்த அப்துல் ரகுமான் சம்பவத்தன்று தனது நண்பருடன் சேர்ந்து சாகுல் ஹமீதை அரிவாளை காட்டி மிரட்டி கொலை செய்ய முயன்றாராம். இதுகுறித்த புகாரின் பேரில் மேலப்பாளையம் போலீசார் கொலை முயற்சி வழக்கில் அப்துல் ரகுமானை கைது செய்தனர். மேலும் அவரது நண்பரை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்