அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள மேல சிந்தாமணி கிராமத்தில் வசித்து வருபவர் அய்யப்பன். இவருடைய மனைவி நித்யா (வயது 25). இவர் சமீபத்தில் அப்பகுதியில் வீட்டுமனை வாங்கியதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் அதேபகுதியில் வசித்து வரும் அமிர்தலிங்கம் மனைவி கோசலை மற்றும் அவரது மகன் வீரமணி (42) ஆகியோர் வீட்டுமனை வாங்கிய நித்யாவை தகாத வார்த்தைகளால் திட்டியும், அவரது வீட்டின் முன்பு கல்லை தூக்கி போட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து நித்யா அளித்த புகாரின் பேரில் தா.பழூர் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் வழக்குப்பதிவு செய்து தகராறில் ஈடுபட்ட வீரமணியை கைது செய்தார்.