டிரைவரிடம் கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டியவர் கைது
டிரைவரிடம் கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டியவர் கைது செய்யப்பட்டார்.
ஆண்டிமடம் அருகே உள்ள தென்னூர் புதுத்தெருவை சேர்ந்தவர் அந்தோணி மகன் பிரிட்டோ (வயது 33). லாரி டிரைவர். இவர் நேற்று முன்தினம் லாரியில் லோடு ஏற்றிக்கொண்டு சென்னையில் இருந்து கும்பகோணம் நோக்கி சென்று கொண்டு இருந்தார். காடுவெட்டி அருகே லாரி வந்த போது, காடுவெட்டி மெயின்ரோடு பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் தாமரைகனி(33), குணசேகரன் மகன் கோபு ஆகியோர் லாரியை வழிமறித்து பிரிட்டோவிடம் கத்தியை காட்டி, பொங்கல் பண்டிகைக்கு பணம் கொடுத்து விட்டு போ என்று மிரட்டியுள்ளனர். இது குறித்து பிரிட்டோ கொடுத்த புகாரின்பேரில் தாமரைக்கனி, கோபு ஆகியோர் மீது மீன்சுருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்குப்பதிவு செய்து, தாமரைக்கனியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.