டிராக்டர், உழவு கருவிகள் திருடியவர் கைது
டிராக்டர், உழவு கருவிகள் திருடியவர் கைது செய்யப்பட்டார்.
மொரப்பூர்:-
மொரப்பூர் அருகே சந்தப்பட்டியை சேர்ந்த ராஜாமணி (வயது 39) என்பவரை மொரப்பூர் போலீசார் சந்தேகத்தின் பேரில் திருட்டு வழக்கில் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், இருவேறு விவசாயிகளுக்கு சொந்தமான டிராக்டர் மற்றும் உழவு கருவிகளை ராஜாமணி திருடியதாக தெரிகிறது. இதுகுறித்து இரு தரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் ராஜாமணியை கைது செய்தனர்.