கோவில் குத்துவிளக்குகளை திருடியவர் கைது
கோவில் குத்துவிளக்குகளை திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, ரஞ்சன்குடி பஸ் நிறுத்தத்தில் நேற்று காலை சந்தேகம்படும்படியாக ஆண் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதனை கண்ட அப்பகுதி மக்கள் அவர் வைத்திருந்த பையை வாங்கி சோதனை செய்தனர். அதில் ரஞ்சன்குடி பிரிவு சாலையில் உள்ள புற்று மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான 2 குத்து விளக்குகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் இதுகுறித்து மங்களமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் அந்த நபரை பிடித்து குத்து விளக்குகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் சேலம் மாவட்டம், கெங்கவல்லி தாலுகா, லத்துவாடி கடைவீதியை சேர்ந்த பாலமுருகன் (வயது 38) என்பதும், அவர் கோவிலில் இருந்து குத்து விளக்குகளை திருடி வந்ததும் தெரியவந்தது. பின்னர் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலமுருகனை கைது செய்தனர்.