இரும்பு கம்பிகள் திருடியவர் சிறையில் அடைப்பு

இரும்பு கம்பிகள் திருடியவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

Update: 2023-06-07 18:11 GMT

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தாலுகா, வேலூர் பூங்கா நகரை சேர்ந்தவர் ரெங்கசாமி(வயது 38). இவர் பூதகுடி கவியரசு கார்டனில் புதிதாக வீடு கட்டி வருகிறார். இந்த நிலையில் கட்டிட வேலைக்காக ஒரு டன் இரும்பு கம்பிகளை வாங்கி, தான் கட்டி வரும் கட்டிடத்தின் அருகே வைத்துள்ளார். இதனையடுத்து கடந்த 5-ந் தேதி அன்று வழக்கம்போல் கட்டிடம் கட்டும் வேலை முடிந்தபின் வீட்டிற்கு சென்றவர் மீண்டும் அடுத்தநாள் காலை வந்து பார்த்தபோது வீட்டின் அருகே வைக்கப்பட்டு இருந்த இரும்பு கம்பிகள் திருட்டுபோய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து அவர் இதுகுறித்து விராலிமலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் திருட்டில் ஈடுபட்ட விராலிமலை தாலுகா வில்லாரோடை காலனியை சேர்ந்த இளையராஜா மகன் ஸ்ரீதர் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்