காரியாபட்டி,
நரிக்குடி ஊராட்சி ஒன்றியம், ஆலத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் குருநாதன் (வயது 64). இவர் ஆலத்தூர் கிராமத்தில் 10 ஆடுகளை வைத்து மேய்த்து வருகிறார். தனது ஆடுகளை வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு தூங்கிவிட்டார். நள்ளிரவு ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டு எழுந்து பார்த்தபோது 2 ஆடுகளை 2 நபர்கள் மோட்டார் சைக்கிளில் தூக்கி சென்றதை பார்த்து சத்தம் போட்டார். ஆனால் ஆட்டினை திருடிய நபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து அ.முக்குளம் போலீசார் விசாரணை செய்து திருப்புவனம் புதூரை சேர்ந்த நாகராஜன் (வயது 23) என்பவரை கைது செய்தனர்.