காவலாளியிடம் செல்போன் பறித்தவர் சிக்கினார்

பாளையங்கோட்டையில் காவலாளியிடம் செல்போன் பறித்தவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-03-29 19:38 GMT

பாளையங்கோட்டை அருகே உள்ள சிவந்திப்பட்டியை சேர்ந்தவர் பேச்சிமுத்து (வயது 65). இவர் தியாகராஜநகர் ரெயில்வே கேட் அருகில் உள்ள ஒரு கடையில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று பணியில் இருந்த பேச்சிமுத்துவிடம் நாலாட்டின்புதூரை சேர்ந்த மாடசாமி (33) என்பவர் மிரட்டி செல்போனை பறித்து சென்றார். இதுதொடர்பாக அவர் பெருமாள்புரம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் வழக்குப்பதிவு செய்து மாடசாமியை கைது செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்