லாரியில் தார்ப்பாய் திருடியவர் கைது
தூத்துக்குடியில் லாரியில் தார்ப்பாய் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் உள்ள ஒரு லாரி டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் கடந்த 25-ந் தேதி 2 லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. அந்த லாரிகளில் இருந்த 3 தார்ப்பாய்களை மர்மநபர் திருடி சென்று விட்டாராம். இதன் மதிப்பு ரூ.90 ஆயிரம் என்று கூறப்படுகிறது. இது குறித்து நிறுவன மேலாளர் மணிகண்டன் சிப்காட் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், தூத்துக்குடி 3-வது மைலை சேர்ந்த ராமசாமி மகன் மணிகண்டன் என்ற பாட்டில் மணி (வயது 37) என்பவர் 2 லாரிகளில் இருந்து 3 தார்பாய்களை திருடியது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து பாட்டில்மணியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த 3 தார்ப்பாய்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.