காற்றாலையில் இரும்பு திருடியவர் கைது

பாளையங்கோட்டை பகுதியில் காற்றாலையில் இரும்பு திருடியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-12-30 20:39 GMT

பாளையங்கோட்டை:

பாளையங்கோட்டை அருகே மேலகுளத்தை சேர்ந்தவர் மாரிமுத்து என்ற பட்டாணி (வயது 29). இவர் மானூர், நாங்குநேரி ஆகிய இடங்களில் காற்றாலையில் திருடிய இரும்புகளை விற்பனை செய்வதற்காக, கே.டி.சி.நகரை சேர்ந்த ஜான்சன் செல்வின்ராஜ் (வயது 36) என்பவரை மிரட்டி அவரது ஆட்டோவில் கொண்டு சென்றார். போலீசாரை பார்த்ததும் மாரிமுத்து தப்பி சென்றார். இதுகுறித்து ஜான்சன் செல்வின்ராஜ் கொடுத்த புகாரின் பேரில், தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரிமுத்துவை கைது செய்தனர். அவரிடம் இருந்து 600 கிலோ இரும்பு பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்