கணவரை பிரிந்த பெண்ணை கத்திரிகோலால் குத்தியவரால் பரபரப்பு

கோவையில் கணவரை பிரிந்த பெண்ணை கத்திரிகோலால் குத்தியவரால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-10-18 20:30 GMT

குடும்ப வாழ்க்கை என்பது ஒரு வரம்..ஆனால் சிலருக்கு இந்த வரம் வாய்ப்பதில்லை...

சூழ்நிலை காரணமாக பிரிந்து விடுகின்றனர்..

இருப்பினும் இதில் பாதிக்கப்படுவது யார்...? என்றால்

பெண்தான்...

அப்படித்தான் இந்த பெண்..

கருத்து வேறுபாட்டால்

கணவனை பிரிந்தாள்... ஆனால் கண்மணிகளாய் இருக்கும் தனது இரு குழந்தைகளை இரு கண்களாக நினைத்தாள். இதனால் அவர்களை தன்னுடன் வைத்துக்கொண்டு வாழ்வாதரத்துக்காக டெய்லர் கடை நடத்தினாள்...

துணி இல்லாத போதும் துணிவாக எழுந்து நின்றாள்...

இருந்தாலும் அவள் பெண் என்பதால் கழுகு கண்கள் அவளை நோட்டமிடாமல் இருப்பதில்லையே...

அப்படித்தான்...

இவள்...பலரது கழுகு பார்வைகளுக்கு தப்பி தனது பயணத்தை தொடர்ந்தாள்..

அவள் உண்டு...அவள் வேலை உண்டு என்று டெய்லரிங் தொழிலில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு வாழ்ந்தாள்...

அப்போது தான் அது நடந்தது ....எது? இது பற்றி பார்க்கலாம்:-

கோவை வடவள்ளி பகுதியில் வசிப்பவர் 32 வயது பெண். இவருக்கும் கணவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்தாள். ஆனால் இவருடன் 2 குழந்தைகள் இருந்தனர்.

இவர் அதே பகுதியில் டெய்லர் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு பெண் வாடிக்கையாளர்கள் அதிகம்.

அவர்கள் அடிக்கடி அவரது கடையை தேடி வந்து செல்வது வழக்கம்.

அவர் கணவனை பிரிந்து வாழ்கிறார் என்று தெரிந்ததும்... அதேபகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவரான ஸ்ரீதர் (35) என்பவருக்கு அந்த பெண் மீது ஒரு கண்.

அடிக்கடி அவரும் அந்த கடைக்கு வாடிக்கையாளர்போல் சென்று வந்துள்ளார். இதனை அந்த பெண் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் ஸ்ரீதர், அந்த பெண்ணை தன் வசப்படுத்தி விடவேண்டும் என்கிற எண்ணத்தில், கட்டவிழ்ந்த மோகத்தில்... அவர் மீது தணியாத தாகத்துடன் இருந்துள்ளார்.

சம்பவத்தன்று அந்த பெண் கடையில் தனியாக இருந்த போது ஸ்ரீதர் அந்த கடைக்குள் நுழைந்தார்.

அந்த பெண்ணும், வாடிக்கையாளராக வந்துள்ளார். ஏதேனும் அவருடைய மனைவி அல்லது குழந்தைகளின் ஆடையை தைக்க கொடுப்பார் என்று நினைத்துள்ளார்.

ஆனால் அவர் நினைத்தது வேறு... அவர் நடந்து கொண்டது வேறு.

ஆம்...தனியாக இருக்கிறாயே...கணவனை பிரிந்து விட்டாயே...நான் இருக்கிறேன்...உனக்காக..உன்னோடு வாழ்கிறேன்..என்னோடு வந்து விடு என்று கூறி உள்ளார்.

ஆனால் ஏற்கனவே முதல் கணவனால் பட்டப்பாட்டை நினைத்து வாடும் அந்த நெஞ்சின் வடு இன்னும் காயவில்லையே என்று நினைத்து நொந்து போய் இருந்தாள் அந்த பெண்.

ஸ்ரீதரின் பேச்சும்..செயலும் அவளை நினைத்து பார்க்க முடியாத வகையில் தூக்கிவாரி போட்டது.

வலைவிரித்தான் அவன்....வளைந்து கொடுக்க மறுத்தாள் அவள்...

ஸ்ரீதரை கண்டிக்க தொடங்கினாள்...

கத்த தொடங்கினாள்...

அதற்குள் ஸ்ரீதர்...அங்கிருந்த கத்திரிகோலை எடுத்து...

கண்ணிமைக்கும் நேரத்தில்

அந்த பெண்னின் தோள் பட்டையில் குத்தி விட்டு...

கொலை மிரட்டலும் விடுத்தார்...

குத்துப்பட்ட பெண் வலி தாங்க முடியாமல் துடித்தார்...ரத்தம் பாய்ந்து வந்ததை பார்த்த ஸ்ரீதர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து அந்த பெண், வடவள்ளி போலீசில் புகார் செய்தார். போலீசார் ஸ்ரீதர் மீது கொலை மிரட்டல், தாக்குதல், பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம், உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள்.


Tags:    

மேலும் செய்திகள்