வாலிபரை கத்தியால் குத்தியவர் கைது

வாலிபரை கத்தியால் குத்தியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-10-18 20:01 GMT

கீழப்பழுவூர்:

அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம் ராமசாமி நகரை சேர்ந்த மகாதேவனின் மகன் ஸ்டாலின்(வயது 31). இவருக்கும், திருமானூரை சேர்ந்த இளங்கோவனின் மகன் கொளஞ்சியப்பன்(28) என்பவருக்கும் இடையே கடந்த சில மாதங்களாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் கொளஞ்சியப்பன் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஸ்டாலினை வயிற்றில் குத்திவிட்டு தப்பி சென்றுள்ளார். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அவர் திருமானூர் போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொளஞ்சியப்பனை கைது செய்தனர். பின்னர் அவரை அரியலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்