நண்பரை கத்தியால் குத்தியவர் கைது
தூத்துக்குடியில் நண்பரை கத்தியால் குத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி சிவஜோதி நகரைச் சேர்ந்த மந்திரம் மகன் வெங்கடேஷ் (வயது 33). இவரும், தூத்துக்குடி நந்தகோபாலபுரம் பகுதியைச் சேர்ந்த செல்லத்துரை மகன் அஜித் ராஜாவும் (32) நண்பர்கள். இந்நிலையில் நேற்று கனகசபாபதி தெரு பகுதியில் வெங்கடேஷ், அஜித் ராஜா மற்றும் அஜித் ராஜாவின் நண்பர் ஒருவர் ஆகிய 3 பேர் சேர்ந்து மது அருந்தி உள்ளனர். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் அஜித் ராஜா, வெங்கடேசை கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்த புகாரின் பேரில் மத்தியபாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகப்பெருமாள் வழக்கு பதிவு செய்து அஜித் ராஜாவை கைது செய்தார். அஜித் ராஜா மீது ஏற்கனவே தூத்துக்குடி மத்தியபாகம், வடபாகம் ஆகிய காவல் நிலையங்களில் 6 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.