வாலிபரை அரிவாளால் கீறியவர் கைது

வாலிபரை அரிவாளால் கீறியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-07-11 19:55 GMT

கல்லக்குடி:

புள்ளம்பாடி உதயநகரில் வசித்து வருபவர் ஆரோக்கியதாஸ். இவரது மகன் பாண்டியன்(வயது 35). இவருக்கும், இதே பகுதியில் வசித்து வரும் ஜான்சவுந்தரராஜன் மகன் ஆல்வின் என்ற ஆண்டனிஜோசப்புக்கும் இடையே கோவில் திருவிழாவில் அன்னதானம் செய்யும்போது வாய்த்தகராறு ஏற்பட்டு, முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆல்வின் மற்றும் அவரது தாய் ஜோஸ்பின் மேரி ஆகியோர் பாண்டியனை தாக்கி, அரிவாளால் வயிற்றில் கீறி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதையடுத்து அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் பாண்டியனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் லால்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து கல்லக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபிநாத் வழக்குப்பதிவு செய்து ஆல்வினை கைது செய்து, லால்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கிளை சிறையில் அடைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்