சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை ெகாடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.
சிவகாசி,
சிவகாசி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 6 வயது சிறுமி தனது வீட்டின் அருகில் விளையாடிக்கொண்டு இருந்தது. அப்போது முருகேசன் (வயது 56) என்பவர் சிறுமியை அழைத்து பாலியல் தொல்லை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். பின்னர் பெற்றோர் சிவகாசி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் திலகராணி வரதராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த இன்னொரு 6 வயது சிறுமியிடமும் முருகேசன் பாலியல் தொந்தரவு செய்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து முருகேசனை போலீசார் கைது செய்தனர்.