ஆசிரியை வீட்டில் கொள்ளையடித்தவர் கைது

வடக்கன்குளத்தில் ஆசிரியை வீட்டில் கொள்ளையடித்தவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-05-02 19:50 GMT

வடக்கன்குளம்:

நெல்லை மாவட்டம் வடக்கன்குளத்தைச் சேர்ந்தவர் டேனியல் சேகர். இவரது மனைவி ஷகிலா. இவர் அப்பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி ஒன்றில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.

கடந்த மார்ச் மாதம் 22-ந் தேதி இரவில், வீட்டில் புகுந்த மர்மநபர்கள் 32 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து ஷகிலா அளித்த புகாரின் பேரில் பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் காவல்கிணறு பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றி வந்த வாலிபர் ஒருவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அவர் நாங்குநேரி அருகே உள்ள சங்கநேரியைச் சேர்ந்த முருகேசன் மகன் சங்கரசுப்பு (23) என்பதும், ஆசிரியை ஷகிலாவை அரிவாள் காட்டி நகைகளை கொள்ளையடித்துச் சென்ற நபர்களில் ஒருவர் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்