மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது

மேட்டுப்பாளையத்தில் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-08-21 16:38 GMT

மேட்டுப்பாளையம்

மேட்டுப்பாளையம் காரமடை ரோடு பகுதியைச் சேர்ந்த 41 வயதான ஒருவர் லாரி ஒர்க் ஷாப்பில் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். இவரது 2-வது மகளான 16 வயது சிறுமி தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று கணவன் -மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.

இதனால் மனைவி கோபித்து கொண்டு தனது அம்மாவின் சொந்த ஊருக்கு சென்று விட்டார். வீட்டில் தந்தையுடன் மகள் மட்டும் இருந்துள்ளார். அப்போது அவர், பெற்ற மகள் என்று பாராமல் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. மறுநாள் காலையில் இதை யாரிடமும் சொல்லக் கூடாது என்று சிறுமியை மிரட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டார்.

இதையடுத்து சிறுமிக்கு உடல் நலக்கோளாறு ஏற்பட்டது. இதனால் அந்த சிறுமி தனக்கு நேர்ந்த ெகாடுமை குறித்து மேட்டுப்பாளையம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் போச்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுமியின் தந்தையை கைது செய்தனர். கைதான அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்