சிறுமியை கர்ப்பமாக்கியவர் போக்சோவில் கைது
சிவகாசி அருகே சிறுமியை கர்ப்பமாக்கியவரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
சிவகாசி,
சிவகாசி அருகே உள்ள ஒரு பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 40) . இவருக்கு 2 மனைவிகள் 4 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் அவர் 17 வயது சிறுமியிடம் அத்துமீறியதாக கூறப்படுகிறது. தற்போது அந்த சிறுமி தற்போது 4 மாதம் கர்ப்பமாகி உள்ளார். உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்த போது சிறுமி கர்ப்பமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து சிறுமியின் குடும்பத்தினர் சிவகாசி அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேல்முருகனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.