அரசு பஸ்சை மறித்து டிரைவரை தாக்கி விட்டு தப்பியவர் கைது
அரசு பஸ்சை மறித்து டிரைவரை தாக்கி விட்டு தப்பிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
காட்பாடி
அரசு பஸ்சை மறித்து டிரைவரை தாக்கி விட்டு தப்பிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
வேலூரிலிருந்து காட்பாடி வழியாக திருத்தணிக்கு நேற்று முன்தினம் மாலை அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சை ராணிப்பேட்டை மாவட்டம் வெங்கடாபுரம் கிராமத்தைச் சேர்ந்த டிரைவர் குணசீலன் ஓட்டிச்சென்றார்.
பஸ் காட்பாடி ஓடைப்பிள்ளையார் கோவில் அருகில் சென்று கொண்டிருந்த போது பஸ்சின் பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்தவர் பஸ்சை நிறுத்தினார். பின்னர் மோட்டார் சைக்கிளுக்கு வழிவிடவில்லை என எனக்கூறி பஸ் டிரைவர் குணசீலனை தாக்கியதோடு பஸ்சையும் சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பி விட்டார்.
சம்பவம் குறித்து காட்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அங்கிருந்த கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்தனர். அப்போது பஸ் டிரைவரை தாக்கிய நபர் காட்பாடி மதிநகர் பகுதியை சேர்ந்த பிரேம்குமார் என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.