மதுபாட்டில்களை பதுக்கியவர் கைது

கனகம்மாசத்திரத்தில் மதுபாட்டில்களை பதுக்கியவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-08-25 09:04 GMT

திருவள்ளூர் மாவட்டம், கனகம்மாசத்திரம் பஜார் தெருவைச் சேர்ந்தவர் விஜய் (வயது 27). இவர் சட்ட விரோதமாக தன்னுடைய வீட்டில் ஆந்திர மாநில மது பாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக கனகம்மாசத்திரம் போலீஸ் நிலையத்திற்கு புகார் வந்தது.

இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையிலான போலீசார் விஜய் வீட்டில் சோதனை செய்யும்போது மது பாட்டில்களை பதுக்கி வைத்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்