தொழிலாளியிடம் வாளை காட்டி பணம் பறித்தவர் கைது

ராமநாதபுரத்தில் தொழிலாளியிடம் வாளை காட்டி பணம் பறித்தவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-02-24 18:36 GMT

ராமநாதபுரம் மாரியம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் சுதந்திரநாதன் மகன் மணிகண்டன் (வயது 38). இவர் ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் உள்ள பழக்கடை ஒன்றில் கூலி வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இவர் ராமநாதபுரம் ரெயில்வே குடியிருப்பு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த மர்ம நபர் பணம் தருமாறு கேட்டுள்ளார். அவர் தர மறுக்கவே மர்ம நபர் மறைத்து வைத்திருந்த நீண்ட வாளை காட்டி மிரட்டி மணிகண்டன் பையில் வைத்திருந்த ரூ.200-ஐ எடுத்துள்ளார். அப்போது மணிகண்டன் சத்தம்போடவே கத்தினால் குத்தி கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியபோது அவரின் சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்துள்ளனர். அவர்களையும் வாளை காட்டி மிரட்டி தப்பி சென்று விட்டார். இது குறித்து மணிகண்டன் ராமநாதபுரம் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து ராமநாதபுரம் ஆர்.எஸ்.மடை முனியசாமி மகன் ராஜ்குமார் என்ற கொக்கிகுமார் (30) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து வாளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்