ஓசூரில்இளம்பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியவர் கைது

Update: 2023-07-19 18:45 GMT

ஓசூர்

ஓசூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய காலனி பேஸ் 16-ல், மாருதி நகர் பகுதியில் ஒரு வீட்டில் இளம்பெண்களை வைத்து விபசாரம் நடப்பதாக அட்கோ போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர்.அப்போது அங்கு இளம்பெண்களை வைத்து விபசாரம் நடத்தியது தெரியவந்தது. இதையடுத்து, இளம்பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. இதுதொடர்பாக மஞ்சுளா (வயது33) என்பவரை போலீசார் கைது செய்தனர். அந்த இளம்பெண்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்