வாலிபரை கத்தியால் வெட்டியவர் கைது
வாலிபரை கத்தியால் வெட்டியவரை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம்,
விருத்தாசலம் அருகே பரவலூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் தர்மராஜ் (வயது 38). இவருக்கும் இவரது பக்கத்து வீட்டில் வசித்து வரும் தங்கதுரை மகன்கள் விக்கி (21), விஸ்வா (19) ஆகியோருக்கும் இடையே இடப்பிரச்சினை சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்தநிலையில் . தர்மராஜ் தனது வீட்டின் அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவரை விக்கி, விஸ்வா மற்றும் ஆதரவாளர் முருகவேல் ஆகியோர் ஒன்று சேர்ந்து திட்டி கத்தியால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த தர்மராஜ் சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து தர்மராஜ் கொடுத்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார், முருகவேல் உள்பட 3 பேர் மீது வழக்குபதிந்து விக்கியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.