விவசாயியை மண்வெட்டியால் வெட்டியவர் கைது

ஒரத்தநாடு அருகே விவசாயியை மண்வெட்டியால் வெட்டியவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-04-09 19:18 GMT

ஒரத்தநாடு:

ஒரத்தநாடு யானைக்காரர் தெருவை சேர்ந்தவர் ரெங்கநாதன் (வயது39). விவசாயி. சம்பவத்தன்று இரவு அதே பகுதியில் உள்ள அவருக்கு சொந்தமான விவசாய பம்பு செட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது ரெங்கநாதனிடம் கடந்த சில வருடங்களுக்கு முன்பு டிரைவராக வேலை பார்த்த ஒரத்தநாடு செட்டிமண்டபத்தை சேர்ந்த மணிகண்டன் (24) என்பவர் அங்கு வந்து ரெங்கநாதனை திடீரென மண்வெட்டியால் வெட்டியுள்ளார். இதில் காயம் அடைந்த ரெங்கநாதன் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து ரெங்கநாதன் கொடுத்த புகாரின் பேரில் ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்