மனைவிைய வெட்டியவர் கைது
குடும்பத்தகராறில் மனைவியை வெட்டியவரை போலீசார் கைது செய்தனர்.
வத்திராயிருப்பு,
வத்திராயிருப்பு அருகே வ.புதுபட்டியை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 40). இவரது மனைவி வசந்தா (39). கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
வசந்தாவை பார்க்கும் போதெல்லாம் மூர்த்தி தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
தனது வீட்டு வாசலில் உட்கார்ந்து இருந்த வசந்தாவை, மூர்த்தி அரிவாளால் வெட்ட முயன்றார். அப்போது தப்பி ஓட முயன்ற வசந்தாவிற்கு காலில் வெட்டு விழுந்தது. உடனே அருகில் இருந்தவர்கள் வசந்தாவை மீட்டு வத்திராயிருப்பு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து வத்திராயிருப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து மூர்த்தியை கைது செய்தனர்.