மோட்டார்சைக்கிளை வெட்டி சேதப்படுத்தியவர் கைது
வடக்கு விஜயநாராயணத்தில் மோட்டார்சைக்கிளை வெட்டி சேதப்படுத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
இட்டமொழி:
வடக்கு விஜயநாராயணம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து (வயது 85). இவரது எதிர் வீட்டில் வசிப்பவர் செல்லப்பாண்டி (60). இவர் நேற்று முன்தினம் மதுபோதையில் இசக்கிமுத்துவை அவதூறாக பேசி, அவரது மோட்டார் சைக்கிளை அரிவாளால் வெட்டி சேதப்படுத்தி, கொலைமிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில், வடக்கு விஜயநாராயணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தவசிலிங்கம் வழக்குப்பதிவு செய்து செல்லப்பாண்டியை கைது செய்தார்.