கோவில் உண்டியலை உடைத்து திருடியவர் கைது

முதுகுளத்தூர் அருகே கோவில் உண்டியலை உடைத்து திருடியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-12-24 18:45 GMT

முதுகுளத்தூர்,

முதுகுளத்தூர் அருகே இளஞ்செம்பூர் கிராமத்தில் இருளாகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் பூசாரியாக செல்லவேல் பணியாற்றி வருகிறார். இந்த கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்டது. இது குறித்த புகாரின் பேரில் இளஞ்செம்பூர் போலீசார் உண்டியலை உடைத்து பணம் திருடியதாக பரமக்குடி சுப்பிரமணியபுரம் தெருவை சேர்ந்த சுல்தான் செய்யது இப்ராஹிம் அலி (வயது 52) என்பவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்