உண்டியலை உடைத்து பணத்தை திருடியவர் கைது

உண்டியலை உடைத்து பணத்தை திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-04-17 19:13 GMT

சிவகாசி, 

சிவகாசி-திருத்தங்கல் ரோட்டில் பனையடி முனீஸ்வரன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்த உண்டியல் வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மர்ம ஆசாமி கோவில் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடி சென்றார். இது குறித்து அப்பகுதியை சேர்ந்த பால்பாண்டி என்பவர் சிவகாசி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கு தொடர்பாக திருத்தங்கல் கே.கே. நகரை சேர்ந்த முத்துகிருஷ்ணன் மகன் அஜித்குமார் (வயது 28) என்பவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்