இரும்பு கம்பியால் தாக்கியவர் கைது
வாலிபரை இரும்பு கம்பியால் தாக்கியவர் கைது
நெல்லை அருகே உள்ள கீழ ஓமநல்லூர் பகுதியை சேர்ந்தவர் அஜின் இம்மானுவேல் (வயது 21). இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து டிரம்ஸ் வாசித்து கொண்டிருந்தபோது, அதே பகுதியை சேர்ந்த ஜெயசீலன் (35) என்பவர் அஜின் இமானுவேலுடன் தகராறில் ஈடுபட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இதன் காரணமாக கீழ ஓமநல்லூர், பச்சையாறு பாலம் அருகே அஜின் இம்மானுவேல் வந்து கொண்டிருந்தபோது, ஜெயசீலன் வழிமறித்து அவதூறாக பேசி கையாலும், இரும்பு கம்பியாலும் தாக்கி மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து அஜின் இம்மானுவேல் முன்னீர்பள்ளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் வழக்குப் பதிவு செய்து ஜெயசீலனை கைது செய்தார்.