பெண்ணை அரிவாளால் தாக்கியவர் கைது

பெண்ணை அரிவாளால் தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-04-20 20:19 GMT

அம்பை:

கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள தெற்கு பாப்பான்குளத்தை சேர்ந்தவர் மாரியம்மாள் (வயது 35). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பேச்சிமுத்து (41) என்பவருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று மாரியம்மாள் தெற்கு பாப்பான்குளம் மகாராஜபுரம் தெருவில் நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த பேச்சிமுத்து அரிவாளால் மாரியம்மாளை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாரியம்மாள் கல்லிடைக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் நாககுமாரி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு, பேச்சிமுத்துவை கைது செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்