பெண்ணை தாக்கியவர் கைது
தூத்துக்குடி அருகே பெண்ணை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி அருகே உள்ள உமரிக்கோட்டை நடுத்தெருவை சேர்ந்தவர் பூபதிராஜன் (வயது 53). இவர் குடிபோதையில், அந்த பகுதியில் நின்று கொண்டு இருந்த ஒரு பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம்.
இதுகுறித்த புகாரின் பேரில் தட்டப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து பூபதிராஜனை கைது செய்தனர்.